இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இங்கிலாந்தை சேர்ந்த 49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர் தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ஆம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.
இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.
இதன்படி கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில் 2 பச்சை குத்தும் கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை
குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை இந்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது சாதனைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.