• May 20 2024

யாழில் அரிசி ஆலையில் தீ விபத்து...! பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 1:50 pm
image

Advertisement

யாழில்அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக  பல லட்சம் ரூபாய்  பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசமாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் இன்றையதினம் (09)   அரிசி ஆலையொன்றில்  தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை அரிசி ஆலை  வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது.  இன்று காலை 8 மணியளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து  முற்றாக நாசமாகியுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா? அல்லது தீ வைக்கப்பட்டதா? என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச் சம்பவம் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளரால்  தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



யாழில் அரிசி ஆலையில் தீ விபத்து. பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்.samugammedia யாழில்அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக  பல லட்சம் ரூபாய்  பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசமாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் இன்றையதினம் (09)   அரிசி ஆலையொன்றில்  தீ விபத்து இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை அரிசி ஆலை  வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது.  இன்று காலை 8 மணியளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து  முற்றாக நாசமாகியுள்ளன.மின் ஒழுக்கு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதா அல்லது தீ வைக்கப்பட்டதா என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச் சம்பவம் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளரால்  தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement