வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் - மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.
விரைவில் விசாரணை மேற்கொண்டு 3 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் குறித்த குழுவுக்கு பணித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 129 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 9 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம் - சம்பவம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு. வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் - மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.விரைவில் விசாரணை மேற்கொண்டு 3 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் குறித்த குழுவுக்கு பணித்துள்ளார்.கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 129 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 9 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.