• May 01 2024

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது கோட்டபாய-பகுதி 2 ஆகவே அமையும்...! சஜித் தரப்பு எச்சரிக்கை...!

Sharmi / Apr 17th 2024, 10:19 am
image

Advertisement

கோட்டபாயவின் ஆட்சியின் மறுவடிவமாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படும் என்பதுடன் , மக்கள் அதற்கு  ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(16) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜே.வி.பி.யால் இழைக்கப்பட்டுள்ள கொடூரங்கள் மக்களுக்குத் தெரியும். அவர்களால் கிராமங்களுக்குச் செல்லமுடியாது. அதனால்தான் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரோடு வந்துள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஜே.வி.பி.யின் தலைவர்கள் தான். மாறாக அது புதிய அரசியல் இயக்கம் அல்ல.

பொருளாதாரத்துக்குப் பேரழிவை அக்கட்சியினரே ஏற்படுத்தினர். தேசிய மக்கள் சக்தி என வெளியில் காண்பிக்கப்பட்டாலும் ஜே.வி.பி.தான் அங்கு முடிவெடுக்கும் சக்தி உடையது. அக்கட்சிக்கு சர்வதேச ஆதரவு இல்லை.

ஆட்சி செய்ய அனுபவமும் இல்லை. பொருளாதாரத் திட்டமும் இல்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பது 'கோத்தா பகுதி 2' ஆகவே அமையும். 

அந்தத் தவறை நாட்டு மக்கள் செய்யமாட்டார்கள் என நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்பது கோட்டபாய-பகுதி 2 ஆகவே அமையும். சஜித் தரப்பு எச்சரிக்கை. கோட்டபாயவின் ஆட்சியின் மறுவடிவமாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படும் என்பதுடன் , மக்கள் அதற்கு  ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.கொழும்பில் நேற்று(16) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,ஜே.வி.பி.யால் இழைக்கப்பட்டுள்ள கொடூரங்கள் மக்களுக்குத் தெரியும். அவர்களால் கிராமங்களுக்குச் செல்லமுடியாது. அதனால்தான் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரோடு வந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் ஜே.வி.பி.யின் தலைவர்கள் தான். மாறாக அது புதிய அரசியல் இயக்கம் அல்ல.பொருளாதாரத்துக்குப் பேரழிவை அக்கட்சியினரே ஏற்படுத்தினர். தேசிய மக்கள் சக்தி என வெளியில் காண்பிக்கப்பட்டாலும் ஜே.வி.பி.தான் அங்கு முடிவெடுக்கும் சக்தி உடையது. அக்கட்சிக்கு சர்வதேச ஆதரவு இல்லை.ஆட்சி செய்ய அனுபவமும் இல்லை. பொருளாதாரத் திட்டமும் இல்லை. தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பது 'கோத்தா பகுதி 2' ஆகவே அமையும். அந்தத் தவறை நாட்டு மக்கள் செய்யமாட்டார்கள் என நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement