• Apr 30 2024

இலங்கையில் மே மாதம் முதல் விசேட செயற்றிட்டம் - பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு

Chithra / Apr 17th 2024, 10:20 am
image

Advertisement


 

நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட  குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த விசேட செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

குறித்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை   நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் இவ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 

கடந்த வருடம் பதிவான 32 சதவீத வன்முறைக் குற்றங்களை மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மே மாதம் முதல் விசேட செயற்றிட்டம் - பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு  நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட  குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த விசேட செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.குறித்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை   நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மே முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் இவ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கடந்த வருடம் பதிவான 32 சதவீத வன்முறைக் குற்றங்களை மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement