• May 17 2024

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- எரிக்சொல்ஹெய்ம் கொழும்பில் திடீர் சந்திப்பு...!

Sharmi / Apr 30th 2024, 4:04 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு இன்று(30)  காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செய்திகள் தொடர்பாகவும் , புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் , அரசியல் பிரச்சனைகளுக்கும் சாத்தியமான தீர்வை பெற்றுத்தரக்கூடியவராக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார். அதை அவர் நிரூபித்தும் வருகின்றார். 

அந்த வகையில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே ஜனாதிபதியாக இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

இச்சந்திப்பின்போது நோர்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமன்சு குலட்டி அவர்களும் , கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் டொக்டர் எஸ். தவராசா மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன்(பாரூக் அஸீஸ்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- எரிக்சொல்ஹெய்ம் கொழும்பில் திடீர் சந்திப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு இன்று(30)  காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான செய்திகள் தொடர்பாகவும் , புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் , அரசியல் பிரச்சனைகளுக்கும் சாத்தியமான தீர்வை பெற்றுத்தரக்கூடியவராக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார். அதை அவர் நிரூபித்தும் வருகின்றார். அந்த வகையில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே ஜனாதிபதியாக இருப்பதே நாட்டுக்கு நன்மையாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது நோர்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமன்சு குலட்டி அவர்களும் , கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் டொக்டர் எஸ். தவராசா மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன்(பாரூக் அஸீஸ்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement