• Jan 16 2026

தனிப்பட்ட தகராறால் பலியான உயிர்; பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொடூரக் கொலை!

Chithra / Jan 15th 2026, 12:15 pm
image


கண்டி - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்தென்னாவ பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.


நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கொலைசெய்யப்பட்டவருக்கும்  சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தனிப்பட்ட தகராறால் பலியான உயிர்; பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொடூரக் கொலை கண்டி - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொன்தென்னாவ பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்டவருக்கும்  சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement