• Jan 19 2026

கண்ணிமைக்கும் நொடியில் தோன்றி மறைந்த ஒளி ; மின்னல் வேகத்தில் பயணித்த விண்கலம்!

dileesiya / Jan 17th 2026, 5:29 pm
image

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவான அதிர்ச்சியூட்டும்  வானியல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


குறித்த காணொளியில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வினாடிக்கு சுமார் 8 கிலோமீட்டர் வேகத்தில் வானத்தில் பாய்ந்து, பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது ஒரு விண்கல் போல தீப்பொறியுடன் ஒளிரும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.


மீள் நுழைவு (Re-entry) கட்டத்தில் ஏற்பட்ட தீவிர உராய்வால், விண்கலம் வானத்தில் பிரகாசமாக ஒளிர்ந்து, வானத்தை கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்களிடையே ஆச்சரியமும் உற்சாகமும் ஏற்படுத்தியது. 


பலர் இதனை முதலில் இயற்கை விண்கல் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் சான் டியாகோ கடற்கரையோரத்தில் பாதுகாப்பாகக் கடலில் தரையிறங்கியது. 


இந்த வெற்றிகரமான தரையிறக்கம், ஸ்பேஸ்எக்ஸின் விண்வெளி பயணத் தொழில்நுட்பத்தில் இன்னொரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்த அரிய வானியல் காட்சி தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

https://www.facebook.com/share/v/1Hg3s7x28d/

கண்ணிமைக்கும் நொடியில் தோன்றி மறைந்த ஒளி ; மின்னல் வேகத்தில் பயணித்த விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவான அதிர்ச்சியூட்டும்  வானியல் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வினாடிக்கு சுமார் 8 கிலோமீட்டர் வேகத்தில் வானத்தில் பாய்ந்து, பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் போது ஒரு விண்கல் போல தீப்பொறியுடன் ஒளிரும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.மீள் நுழைவு (Re-entry) கட்டத்தில் ஏற்பட்ட தீவிர உராய்வால், விண்கலம் வானத்தில் பிரகாசமாக ஒளிர்ந்து, வானத்தை கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்களிடையே ஆச்சரியமும் உற்சாகமும் ஏற்படுத்தியது. பலர் இதனை முதலில் இயற்கை விண்கல் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூல் சான் டியாகோ கடற்கரையோரத்தில் பாதுகாப்பாகக் கடலில் தரையிறங்கியது. இந்த வெற்றிகரமான தரையிறக்கம், ஸ்பேஸ்எக்ஸின் விண்வெளி பயணத் தொழில்நுட்பத்தில் இன்னொரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.இந்த அரிய வானியல் காட்சி தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.https://www.facebook.com/share/v/1Hg3s7x28d/

Advertisement

Advertisement

Advertisement