• Jan 19 2026

நோய் தாக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ‘உயிருள்ள தோல்’-விஞ்ஞானிகளின் புரட்சிகர கண்டுபிடிப்பு!

dileesiya / Jan 17th 2026, 5:38 pm
image

நோய் அல்லது உடலுக்குள் ஏற்படும் வீக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க பச்சை நிறத்தில் ஒளிரும் ‘உயிருள்ள தோல்’  ஒன்றை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 


இந்த அடுத்த தலைமுறை உயிரி-தொழில்நுட்பம், அணியக்கூடிய சுகாதார சாதனங்களுக்குப் புதிய பரிமாணத்தைத் திறந்துள்ளது.


டோக்கியோ நகர பல்கலைக்கழகம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், RIKEN மற்றும் Canon Medical Systems பொறியாளர்களுடன் இணைந்து இந்த பயோஹைப்ரிட் தோல் சென்சார்-ஐ உருவாக்கியுள்ளனர்.


இந்த தொழில்நுட்பம், உடலுக்குள் ஏற்படும் வீக்கம், மன அழுத்தம் அல்லது நோயைச் சுட்டிக்காட்டும் புரதங்களை நேரடியாக கண்காணிக்கிறது


பொதுவாக நோய் கண்டறிதலுக்கு இரத்த மாதிரி அல்லது வெளிப்புற சென்சார்கள் தேவைப்படும் நிலையில், இந்த புதிய முறையில் உள்வைப்பு செய்யப்பட்ட தோல் தானாகவே ஒளிர்ந்து எச்சரிக்கை அளிக்கிறது. 


உடலில் வீக்கம் ஏற்பட்டால், தோலில் பொருத்தப்பட்ட பகுதி பச்சை ஒளிர்வை (EGFP) வெளிப்படுத்துகிறது.


எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த பொறிக்கப்பட்ட தோல் உடலுடன் முழுமையாக இணைந்து 200 நாட்களுக்கும் மேலாக செயல்பட்டது.


மின்சாரம், பேட்டரி அல்லது வயரிங் தேவையில்லாமல், உடலின் இயற்கை தோல் புதுப்பிப்பு செயல்முறையால் இது பராமரிக்கப்படுகிறது.



தற்போது வீக்கம் குறித்த எச்சரிக்கையில் கவனம் செலுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் இதே தொழில்நுட்பத்தை சர்க்கரை நோய்,ஹார்மோன் மாற்றங்கள்

போன்ற பல உடலியல் நிலைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


மனித மருத்துவம் மட்டுமல்லாமல், விலங்கு மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளிலும் இந்த ‘உயிருள்ள தோல்’ முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

https://www.facebook.com/share/v/1BPKjXdHPL/

நோய் தாக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ‘உயிருள்ள தோல்’-விஞ்ஞானிகளின் புரட்சிகர கண்டுபிடிப்பு நோய் அல்லது உடலுக்குள் ஏற்படும் வீக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்க பச்சை நிறத்தில் ஒளிரும் ‘உயிருள்ள தோல்’  ஒன்றை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த அடுத்த தலைமுறை உயிரி-தொழில்நுட்பம், அணியக்கூடிய சுகாதார சாதனங்களுக்குப் புதிய பரிமாணத்தைத் திறந்துள்ளது.டோக்கியோ நகர பல்கலைக்கழகம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், RIKEN மற்றும் Canon Medical Systems பொறியாளர்களுடன் இணைந்து இந்த பயோஹைப்ரிட் தோல் சென்சார்-ஐ உருவாக்கியுள்ளனர்.இந்த தொழில்நுட்பம், உடலுக்குள் ஏற்படும் வீக்கம், மன அழுத்தம் அல்லது நோயைச் சுட்டிக்காட்டும் புரதங்களை நேரடியாக கண்காணிக்கிறதுபொதுவாக நோய் கண்டறிதலுக்கு இரத்த மாதிரி அல்லது வெளிப்புற சென்சார்கள் தேவைப்படும் நிலையில், இந்த புதிய முறையில் உள்வைப்பு செய்யப்பட்ட தோல் தானாகவே ஒளிர்ந்து எச்சரிக்கை அளிக்கிறது. உடலில் வீக்கம் ஏற்பட்டால், தோலில் பொருத்தப்பட்ட பகுதி பச்சை ஒளிர்வை (EGFP) வெளிப்படுத்துகிறது.எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த பொறிக்கப்பட்ட தோல் உடலுடன் முழுமையாக இணைந்து 200 நாட்களுக்கும் மேலாக செயல்பட்டது.மின்சாரம், பேட்டரி அல்லது வயரிங் தேவையில்லாமல், உடலின் இயற்கை தோல் புதுப்பிப்பு செயல்முறையால் இது பராமரிக்கப்படுகிறது.தற்போது வீக்கம் குறித்த எச்சரிக்கையில் கவனம் செலுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் இதே தொழில்நுட்பத்தை சர்க்கரை நோய்,ஹார்மோன் மாற்றங்கள்போன்ற பல உடலியல் நிலைகளைக் கண்டறிய பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.மனித மருத்துவம் மட்டுமல்லாமல், விலங்கு மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளிலும் இந்த ‘உயிருள்ள தோல்’ முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.https://www.facebook.com/share/v/1BPKjXdHPL/

Advertisement

Advertisement

Advertisement