• May 19 2024

யாழில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் இராணுவத்தில் பணியாற்றிய நபர்..! கண்டுகொள்ளாத பொலிஸார்! சுமந்திரன் குற்றச்சாட்டு samugammedia

Chithra / Jun 17th 2023, 10:19 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றவேளை சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், அதனை பொலிஸார் கண்டுகொள்வதில்லை ஏனவும் மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வேளையே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் யாட் அமைத்து சட்டவிரோதமான  மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும், குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் இதனால் மக்கள் அவர் குறித்த தகவல்களை வழங்க அச்சப்படுவதாகவும் குறுப்பிட்டார்.

இதேவேளை சட்டவிரோதமான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு மருதங்கேணி, நாகர்கோவில், வல்லிபுரம், முள்ளிச்சந்தி ஆகிய நான்கு இடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ காவலரண்கள் இருக்கின்ற நிலையில் இது எவ்வாறு இடம்பெறுகிறது என கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி ஏழுப்பினர்.

யாழில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடும் இராணுவத்தில் பணியாற்றிய நபர். கண்டுகொள்ளாத பொலிஸார் சுமந்திரன் குற்றச்சாட்டு samugammedia யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மணல் யாட் அமைத்து இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றவேளை சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், அதனை பொலிஸார் கண்டுகொள்வதில்லை ஏனவும் மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வேளையே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,குடாரப்பு பகுதியில் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் யாட் அமைத்து சட்டவிரோதமான  மணல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும், குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் இதனால் மக்கள் அவர் குறித்த தகவல்களை வழங்க அச்சப்படுவதாகவும் குறுப்பிட்டார்.இதேவேளை சட்டவிரோதமான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு மருதங்கேணி, நாகர்கோவில், வல்லிபுரம், முள்ளிச்சந்தி ஆகிய நான்கு இடங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ காவலரண்கள் இருக்கின்ற நிலையில் இது எவ்வாறு இடம்பெறுகிறது என கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி ஏழுப்பினர்.

Advertisement

Advertisement

Advertisement