• Oct 18 2025

நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

shanuja / Oct 16th 2025, 4:10 pm
image


கற்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (15) கற்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


புத்தளம் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உச்சிமுனை தீவுகள் பகுதியிலிருந்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டது.


உயிரிழந்தவர் 57 வயதுடைய காலி கராபிட்டிய பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



இவர் தனது ஐந்து நண்பர்கள் அடங்கிய குழுவினருடன்  சுற்றுலாவுக்காக  உச்சிமுனை தீவுகள் கடற்கரைக்கு சென்றிருந்த நபர் நீராடிக் கொண்டிருந்த போது, கடல் அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கற்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (15) கற்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.புத்தளம் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உச்சிமுனை தீவுகள் பகுதியிலிருந்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டது.உயிரிழந்தவர் 57 வயதுடைய காலி கராபிட்டிய பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இவர் தனது ஐந்து நண்பர்கள் அடங்கிய குழுவினருடன்  சுற்றுலாவுக்காக  உச்சிமுனை தீவுகள் கடற்கரைக்கு சென்றிருந்த நபர் நீராடிக் கொண்டிருந்த போது, கடல் அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இது தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement