• Jul 28 2025

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி; வீதியை விட்டு விலகி கால்வாய்குள் கவிழ்ந்து விபத்து

Chithra / Jul 27th 2025, 5:10 pm
image

 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி சென்ற முச்சக்கவண்டி ஒன்று கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இன்று பிற்பகல்   இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து கால்வாய்குள் விழுந்ததாகத் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி; வீதியை விட்டு விலகி கால்வாய்குள் கவிழ்ந்து விபத்து  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி சென்ற முச்சக்கவண்டி ஒன்று கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இன்று பிற்பகல்   இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து கால்வாய்குள் விழுந்ததாகத் தெரிவித்தனர்.இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement