• Nov 26 2024

திருமலையில் மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள்...! இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி...!

Sharmi / May 4th 2024, 10:24 am
image

திருகோணமலை ஹொரவபொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.

மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மொரவெவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியால் வந்த மாட்டுடன் மோதியதில் ஒரு இளைஞரின் இரு கைகளும் உடைந்துள்ளதுடன் மற்றைய இளைஞரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை படுகாயம் அடைந்த  இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு படுகாயம் அடைந்த இளைஞர்கள் மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்த 30 மற்றும் 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

மொரவெவ பிரதேசத்தில் வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதினால் இவ்விபத்து இடம்பெற்று வருவதாகவும் பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமலையில் மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள். இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி. திருகோணமலை ஹொரவபொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மொரவெவ பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியால் வந்த மாட்டுடன் மோதியதில் ஒரு இளைஞரின் இரு கைகளும் உடைந்துள்ளதுடன் மற்றைய இளைஞரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதேவேளை படுகாயம் அடைந்த  இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இவ்வாறு படுகாயம் அடைந்த இளைஞர்கள் மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்த 30 மற்றும் 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.மொரவெவ பிரதேசத்தில் வீதிகளில் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதினால் இவ்விபத்து இடம்பெற்று வருவதாகவும் பிரதேச சபையினர் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement