• Sep 20 2024

கோட்டா அவமானப்பட்டதை போன்றதொரு - நிலையை தடுக்கவே – புதிய சட்டமூலம் - தவராசா !samugammedia

Tamil nila / May 6th 2023, 6:13 pm
image

Advertisement

காலிமுகத்திடல் போராட்டத்தை போன்று இன்னாரு போராட்டம் இந்த நாட்டில் இடம்பெறக்கூடாது என்ற காரணத்திற்காகவே ரணில் விக்கிரமசிங்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதாக  ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா மற்றும்  பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த நல்லாட்சி காலத்தில் பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமென கூறப்பட்டாலும் நீக்கப்படவில்லை.

இப்படியான கொடூரமான சட்டம்  நீக்கப்பட வேண்டும். 

ஆனால் அந்த பயங்கரவாத தடைச் சட்டத்திதிற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவரவுள்ளனர். அது முதலுள்ள சட்டத்தை விட ஆபத்தானது.

நல்லாட்சி கால நீதியமைச்சரே தற்போதும் நீதியமைச்சராக உள்ளார். இந்த சட்டமூலம் கொண்டுவரப்படும் போது யாரோடும் கலந்துலையாடப்படவில்லை.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் ஒரு விடயத்தை பற்றி பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்ற நிலையே காணப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் அரசியலுரிமையில் உள்ள பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் , நடமாடும் சுதந்திரம் ஆகிய மூன்றும் முற்றுமுழுதாக அந்த விடயங்கள் யவும் குற்றமாக கருதப்படும்.

அறகலய போராட்டத்தின் பின் இன்னாரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி இச் சட்டமூலத்தை கொண்டு வருகின்றார். 

இதேவேளை ஊடக சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

இலங்கைக்குள்ளே நடமாட முடியா , வெளிநாடு செல்ல முடியாது போன்ற தடைகளை ஜனாதிபதி விதிக்க முடியுமானவளவு சட்டமூலத்தில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டா அவமானப்பட்டதை போன்றதொரு - நிலையை தடுக்கவே – புதிய சட்டமூலம் - தவராசா samugammedia காலிமுகத்திடல் போராட்டத்தை போன்று இன்னாரு போராட்டம் இந்த நாட்டில் இடம்பெறக்கூடாது என்ற காரணத்திற்காகவே ரணில் விக்கிரமசிங்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வருவதாக  ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா மற்றும்  பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த நல்லாட்சி காலத்தில் பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமென கூறப்பட்டாலும் நீக்கப்படவில்லை.இப்படியான கொடூரமான சட்டம்  நீக்கப்பட வேண்டும். ஆனால் அந்த பயங்கரவாத தடைச் சட்டத்திதிற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவரவுள்ளனர். அது முதலுள்ள சட்டத்தை விட ஆபத்தானது.நல்லாட்சி கால நீதியமைச்சரே தற்போதும் நீதியமைச்சராக உள்ளார். இந்த சட்டமூலம் கொண்டுவரப்படும் போது யாரோடும் கலந்துலையாடப்படவில்லை.இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் ஒரு விடயத்தை பற்றி பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்ற நிலையே காணப்படுகிறது.ஜனநாயக நாட்டில் அரசியலுரிமையில் உள்ள பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் , நடமாடும் சுதந்திரம் ஆகிய மூன்றும் முற்றுமுழுதாக அந்த விடயங்கள் யவும் குற்றமாக கருதப்படும்.அறகலய போராட்டத்தின் பின் இன்னாரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி இச் சட்டமூலத்தை கொண்டு வருகின்றார். இதேவேளை ஊடக சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.இலங்கைக்குள்ளே நடமாட முடியா , வெளிநாடு செல்ல முடியாது போன்ற தடைகளை ஜனாதிபதி விதிக்க முடியுமானவளவு சட்டமூலத்தில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement