• Nov 24 2024

அநுரவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்! பிரதமர் கருத்து

Chithra / Nov 10th 2024, 3:26 pm
image

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.

நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் குழுவொன்று தேவை.

மேலும், எங்களின் நாடாளுமன்ற வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை நினைவுபடுத்தும் போது இதுவரையில் இருந்த அருவருப்பான கருத்தை மக்களாலேயே மாற்ற முடியும் என பிரதமர்  மேலும் தெரிவித்தார்.

அநுரவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும் பிரதமர் கருத்து  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் குழுவொன்று தேவை.மேலும், எங்களின் நாடாளுமன்ற வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை நினைவுபடுத்தும் போது இதுவரையில் இருந்த அருவருப்பான கருத்தை மக்களாலேயே மாற்ற முடியும் என பிரதமர்  மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement