வெளிக்கண்டல் விவசாய சம்மேளத்தின் நீர்பாசன பிரச்சினை பகுதியளவில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், தற்துணிவில் 150 ஏக்கர் செய்கையை தொடர ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புலிங்கதேவன் (முரசுமோட்டை வடக்கு) கமக்கார அமைப்பினால் 228 ஏக்கர் சிறுபோகம் செய்யப்பட்டது.
கரையான் கோஸ்வே கழிவு வாய்க்காலிற்கும், கனகராயன் ஆற்றுக்கும் உட்பட்ட பகுதியில் இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், குறித்த செய்கைக்கு நீர் வழங்குவதில் நெருக்கடி காணப்பட்டது. கனகராயன் ஆற்றினை மறித்து நீரை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்ட நிலையில் முரண்பாடுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், புலிங்கதேவன் (முரசுமோட்டை வடக்கு) கமக்கார அமைப்பினருக்கும், வெளிக்கண்டல் கமக்கார அமைப்பையும் இணைத்து இன்று பதில் மாவட்ட செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
கண்டாவளை பிரதேச செயலக மண்டபத்தில் பதில் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைபுக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, செய்கை மேற்கொள்ளப்பட்ட இந்த போகத்தில் மட்டும் 78 ஏக்கர் செய்கைக்கு புலிங்கதேவன் கமக்கார அமைப்பு ஊடாக வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் 150 ஏக்கர் செய்கைக்கு விவசாயிகள் தமது தற்துணிச்சலின் அடிப்படையில் நிறைவு செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
விவசாயம் செய்யப்பட்டமையால் இம்முறை மாத்திரம் அனுமதிக்கப்படுவதாகவும், இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்படாது எனவும் இதன்போது விவசாயிகளுக்கு இறுக்கமாக அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிக்கண்டல் விவசாய சம்மேளத்தின் நீர்பாசன பிரச்சினைக்கு பகுதியளவில் தீர்வு. வெளிக்கண்டல் விவசாய சம்மேளத்தின் நீர்பாசன பிரச்சினை பகுதியளவில் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், தற்துணிவில் 150 ஏக்கர் செய்கையை தொடர ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புலிங்கதேவன் (முரசுமோட்டை வடக்கு) கமக்கார அமைப்பினால் 228 ஏக்கர் சிறுபோகம் செய்யப்பட்டது.கரையான் கோஸ்வே கழிவு வாய்க்காலிற்கும், கனகராயன் ஆற்றுக்கும் உட்பட்ட பகுதியில் இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில், குறித்த செய்கைக்கு நீர் வழங்குவதில் நெருக்கடி காணப்பட்டது. கனகராயன் ஆற்றினை மறித்து நீரை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்ட நிலையில் முரண்பாடுகள் எழுந்துள்ளது.இந்நிலையில், புலிங்கதேவன் (முரசுமோட்டை வடக்கு) கமக்கார அமைப்பினருக்கும், வெளிக்கண்டல் கமக்கார அமைப்பையும் இணைத்து இன்று பதில் மாவட்ட செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.கண்டாவளை பிரதேச செயலக மண்டபத்தில் பதில் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைபுக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது, செய்கை மேற்கொள்ளப்பட்ட இந்த போகத்தில் மட்டும் 78 ஏக்கர் செய்கைக்கு புலிங்கதேவன் கமக்கார அமைப்பு ஊடாக வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.மேலும் 150 ஏக்கர் செய்கைக்கு விவசாயிகள் தமது தற்துணிச்சலின் அடிப்படையில் நிறைவு செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது.விவசாயம் செய்யப்பட்டமையால் இம்முறை மாத்திரம் அனுமதிக்கப்படுவதாகவும், இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்படாது எனவும் இதன்போது விவசாயிகளுக்கு இறுக்கமாக அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.