• Nov 22 2024

நடுவானிலிருந்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!samugammedia

Tharun / Jan 14th 2024, 12:59 pm
image

பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் அவசரமாக சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. 

பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது, விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 



ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ANA) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்தது. 

அப்போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் இருந்த 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நடுவானிலிருந்து அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.samugammedia பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் அவசரமாக சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில்  தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது, விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ANA) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் இருந்த 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement