• Nov 25 2024

நாயுடன் பயணித்த காரில் கொண்டு செல்லப்பட்ட முக்கிய பொருளால் சிக்கல்...! மைத்துனருக்கு ஏற்பட்ட கதி...!samugammedia

Sharmi / Jan 22nd 2024, 11:48 am
image

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய போதைப்பொருள் சோதனையின் போது, ​​நாயுடன் காரில் கொண்டு செல்லப்பட்ட ஒன்பதாயிரத்து நானூறு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மைத்துனர் (26) உட்பட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிவத்துடுவ யகஹல்வ பிரதேசத்தின் ஊடாக ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வருவதாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின்படி பதில் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். கே. ஜகத்தின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இரண்டு ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கிரிவத்துடுவ பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு ஐஸ் போதைப்பொருள் சொந்தமானது எனவும், தினக்கூலிக்கு தங்களது மோட்டார் சைக்கிளில் ஆர்டர்களுக்காக ஐஸ் போதைப்பொருளை விநியோகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேன் கோர்ஸோ ரக நாய் ஒன்றுடன் காரில் தம்பதியொன்று குறித்த இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, ​​அதிரடியாக இறங்கிய காவல்துறை அதிகாரிகள், காரில் இருந்து வந்த நபரை உடனடியாக சோதனை செய்ததில், அவரிடம் 2900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், அந்த பெண்ணிடம் மேலும் 6500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இளைஞருக்கு அழுத்தம் கொடுத்து பலவந்தமாக இந்த மோசடியில் ஈடுபட்டமையும் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள்கள் நாட்டின் முன்னணி பாரிய போதைப்பொருள் வியாபாரிகளில் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாயுடன் பயணித்த காரில் கொண்டு செல்லப்பட்ட முக்கிய பொருளால் சிக்கல். மைத்துனருக்கு ஏற்பட்ட கதி.samugammedia பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய போதைப்பொருள் சோதனையின் போது, ​​நாயுடன் காரில் கொண்டு செல்லப்பட்ட ஒன்பதாயிரத்து நானூறு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மைத்துனர் (26) உட்பட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிரிவத்துடுவ யகஹல்வ பிரதேசத்தின் ஊடாக ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் வருவதாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின்படி பதில் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். கே. ஜகத்தின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று கிரிவத்துடுவ யகஹலுவ பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இரண்டு ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கிரிவத்துடுவ பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு ஐஸ் போதைப்பொருள் சொந்தமானது எனவும், தினக்கூலிக்கு தங்களது மோட்டார் சைக்கிளில் ஆர்டர்களுக்காக ஐஸ் போதைப்பொருளை விநியோகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கேன் கோர்ஸோ ரக நாய் ஒன்றுடன் காரில் தம்பதியொன்று குறித்த இடத்திற்கு வந்துள்ளனர்.அப்போது, ​​அதிரடியாக இறங்கிய காவல்துறை அதிகாரிகள், காரில் இருந்து வந்த நபரை உடனடியாக சோதனை செய்ததில், அவரிடம் 2900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், அந்த பெண்ணிடம் மேலும் 6500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இளைஞருக்கு அழுத்தம் கொடுத்து பலவந்தமாக இந்த மோசடியில் ஈடுபட்டமையும் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள்கள் நாட்டின் முன்னணி பாரிய போதைப்பொருள் வியாபாரிகளில் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement