• Jan 11 2025

முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நாளில் இனப்படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் வெடித்தது போராட்டம்...!

Sharmi / May 18th 2024, 1:54 pm
image

முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(18) காலை வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் வவுனியா போராட்ட இல்லத்திற்கு முன்பாகவே இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.








முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நாளில் இனப்படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் வெடித்தது போராட்டம். முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(18) காலை வவுனியாவில் இடம்பெற்றது.தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் வவுனியா போராட்ட இல்லத்திற்கு முன்பாகவே இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.குறித்த போராட்டத்தின் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement