• Nov 14 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

Anaath / Aug 27th 2024, 4:05 pm
image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான எதிர்வரும் 3 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அனைவரையும் ஆதரவு வழங்குமாறும்  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் .ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்

முல்லைதீவில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆகஸ்ட் 30 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கடந்த 15 ஆண்டுகளாக இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீடு வீடாக சென்று  இழுத்து செல்லப்பட்ட உறவுகள்,தாமாக சரணடைந்த உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் போராடிக்கொண்டிருக்கின்றோம் எமது உறவுகளுக்கான நீதி எமக்கு கிடைக்வேண்டும் என்று இரவு பகலாக போரடி வருகின்றோம்.

இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவரைக்கும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பல ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அந்த ஆணைக்குழுக்கள் ஊடாக வலுக்கட்டாயமாக பதிவுகள் மேற்கொண்டும்  இதுவரை தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.

 கடைசியாக ஓ.எம்.பி.அலுவலம் ஊடாக எங்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம் என்றும் சொல்லி அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள். 

இந்தநிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்றது. எமது வீதியில் போராடிய தாய்மார்கள் தந்தைமார்கள் இறந்துள்ளார்கள் அதற்கான நீதியும் கிடைக்கவில்லை.

சிறுபிள்ளைகளை கையளித்தோம்  அந்த பிள்ளைகளுக்கான நீதியும் கிடைக்கில்லை இந்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இருந்து பாரிய போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது இதற்காக அனைத்து உறவுகளும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும்.

அரசியல் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்கள், மதகுருமார்கள்,பல்கலைக்கழகமாணவர்கள்,வர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுவதுடன்

கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் அதே நாள் நடைபெறுகின்றது இதற்கான ஆதரவினையும் வழங்கி நிற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான எதிர்வரும் 3 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அனைவரையும் ஆதரவு வழங்குமாறும்  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் .ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்முல்லைதீவில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஆகஸ்ட் 30 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கடந்த 15 ஆண்டுகளாக இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீடு வீடாக சென்று  இழுத்து செல்லப்பட்ட உறவுகள்,தாமாக சரணடைந்த உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் போராடிக்கொண்டிருக்கின்றோம் எமது உறவுகளுக்கான நீதி எமக்கு கிடைக்வேண்டும் என்று இரவு பகலாக போரடி வருகின்றோம்.இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவரைக்கும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பல ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அந்த ஆணைக்குழுக்கள் ஊடாக வலுக்கட்டாயமாக பதிவுகள் மேற்கொண்டும்  இதுவரை தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை. கடைசியாக ஓ.எம்.பி.அலுவலம் ஊடாக எங்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம் என்றும் சொல்லி அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்தநிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்றது. எமது வீதியில் போராடிய தாய்மார்கள் தந்தைமார்கள் இறந்துள்ளார்கள் அதற்கான நீதியும் கிடைக்கவில்லை.சிறுபிள்ளைகளை கையளித்தோம்  அந்த பிள்ளைகளுக்கான நீதியும் கிடைக்கில்லை இந்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் இருந்து பாரிய போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது இதற்காக அனைத்து உறவுகளும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும்.அரசியல் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்கள், மதகுருமார்கள்,பல்கலைக்கழகமாணவர்கள்,வர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுவதுடன்கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் அதே நாள் நடைபெறுகின்றது இதற்கான ஆதரவினையும் வழங்கி நிற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement