• May 12 2024

மூதூர் பிரதேச சபையில் இடம்பெற்ற தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு...!samugammedia

Sharmi / Nov 17th 2023, 1:23 pm
image

Advertisement

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று(17)  இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் ,நூலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் ஊழியர்களுக்கு இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

இதனை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் நடாத்தியிருந்தது.

இதன்போது தகவலறியும் சட்டம் என்றால் என்ன? எவ்வாறு தகவறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரி விண்ணப்பிப்பது? எவ்வாறான விடயங்களுக்கு தகவல்களை கோரலாம் ,தகவல் அறியும் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்தினுள் பதில் கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பொதுமக்களுக்கு இலகுவான முறையில் எவ்வாறு சேவை செய்வது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இச் செயலமர்வின்போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இச்செயலமர்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்தியசோதி, ஊடகவியலாளரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தருமான பொன்.சற்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


மூதூர் பிரதேச சபையில் இடம்பெற்ற தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு.samugammedia தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று(17)  இடம்பெற்றது.மூதூர் பிரதேச சபையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் ,நூலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் ஊழியர்களுக்கு இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.இதனை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் நடாத்தியிருந்தது.இதன்போது தகவலறியும் சட்டம் என்றால் என்ன எவ்வாறு தகவறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரி விண்ணப்பிப்பது எவ்வாறான விடயங்களுக்கு தகவல்களை கோரலாம் ,தகவல் அறியும் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்தினுள் பதில் கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன பொதுமக்களுக்கு இலகுவான முறையில் எவ்வாறு சேவை செய்வது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இச் செயலமர்வின்போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.இச்செயலமர்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்தியசோதி, ஊடகவியலாளரும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தருமான பொன்.சற்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement