• Nov 13 2025

முல்லைத்தீவில் உணவு பார்சல் வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; மீன் பொரியலுக்குள் புழுக்கள்

Chithra / Nov 11th 2025, 6:44 pm
image


முல்லைத்தீவு -  உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். 

பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, உணவில் வழங்கப்பட்டிருந்த மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முல்லைத்தீவில் உணவு பார்சல் வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி; மீன் பொரியலுக்குள் புழுக்கள் முல்லைத்தீவு -  உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, உணவில் வழங்கப்பட்டிருந்த மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement