• Nov 13 2025

கோவிலுக்குள் சாமி அருகில் அமர்ந்திருந்த சிறுத்தை; வழிபடச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியில் சிதறி ஓட்டம்

Chithra / Nov 11th 2025, 1:22 pm
image


அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  உருள்ளவெலி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


வேலைக்குச் செல்லும் முன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட தோட்டத் தொழிலாளர்கள், தெய்வத்தின் அருகே வந்த சிறுத்தை கோயிலின் கூரையில் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


நேற்று இரவு கோயிலின் கதவு திறந்திருந்தபோது சிறுத்தை உள்ளே நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இது தொடர்பாக பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


 

கோவிலுக்குள் சாமி அருகில் அமர்ந்திருந்த சிறுத்தை; வழிபடச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியில் சிதறி ஓட்டம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  உருள்ளவெலி தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் சிறுத்தை புலி ஒன்று உயிருடன் சிக்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.வேலைக்குச் செல்லும் முன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட தோட்டத் தொழிலாளர்கள், தெய்வத்தின் அருகே வந்த சிறுத்தை கோயிலின் கூரையில் அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.நேற்று இரவு கோயிலின் கதவு திறந்திருந்தபோது சிறுத்தை உள்ளே நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இது தொடர்பாக பொதுமக்கள் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் ஊடாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement