• Nov 13 2025

சபையில் ஒழுக்கமில்லாத உறுப்பினர்கள்; அர்சுனா உட்பட சில உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை -சபாநாயகர்!

shanuja / Nov 11th 2025, 4:51 pm
image

சபை நடவடிக்கைகளுக்கு தடங்கல் விளைவிக்க வேண்டாம். அவ்வாறு ஒழுக்கமின்றி நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு -செலவுத் திட்ட விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பின்னர் சபையில் சற்றுநேரம் பதற்றம் எற்பட்டது.


போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றிய பின்னர் இடைநடுவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில் கேள்வியெழுப்ப முயன்றார். 

அதன்போது அவருக்கும் மற்றைய உறுப்பினருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது.


அதன்பின்னரே சபாநாயகர் கொதித்தெழுந்து பேசியுள்ளார். அதில் பாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகிக்க முடியாது. இராமநாதன் அர்ச்சுனா உட்பட சில உறுப்பினர்கள் ஒழுக்கமின்றி நடந்துகொண்டமை தொடர்பில் ஹன்சாட்டில் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு சபாநாயகர் கொதித்தெழுந்த பேசியதில் சபையில் சற்றுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

சபையில் ஒழுக்கமில்லாத உறுப்பினர்கள்; அர்சுனா உட்பட சில உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை -சபாநாயகர் சபை நடவடிக்கைகளுக்கு தடங்கல் விளைவிக்க வேண்டாம். அவ்வாறு ஒழுக்கமின்றி நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு -செலவுத் திட்ட விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பின்னர் சபையில் சற்றுநேரம் பதற்றம் எற்பட்டது.போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றிய பின்னர் இடைநடுவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினை தொடர்பில் கேள்வியெழுப்ப முயன்றார். அதன்போது அவருக்கும் மற்றைய உறுப்பினருக்கும் வாக்குவாதம் இடம்பெற்றது.அதன்பின்னரே சபாநாயகர் கொதித்தெழுந்து பேசியுள்ளார். அதில் பாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகிக்க முடியாது. இராமநாதன் அர்ச்சுனா உட்பட சில உறுப்பினர்கள் ஒழுக்கமின்றி நடந்துகொண்டமை தொடர்பில் ஹன்சாட்டில் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு சபாநாயகர் கொதித்தெழுந்த பேசியதில் சபையில் சற்றுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement