• Nov 23 2024

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொதுசனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் - வேலன் சுவாமிகள் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 10th 2024, 6:17 pm
image

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என  வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

50ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50வது ஆண்டு  நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக உள்ள நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது. நினைவேந்தலினை செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவுகூருவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. அனைவரும் ஓரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்கவேண்டும்.

இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும். இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.


01.வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்

02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்

03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப்படுகொலையாளிகளை பாரப்படுத்தவேண்டும்

04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால்

நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடையமுடியும் என்றார்.

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொதுசனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் - வேலன் சுவாமிகள் தெரிவிப்பு.samugammedia வடக்கு,கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என  வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.50ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50வது ஆண்டு  நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக உள்ள நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது. நினைவேந்தலினை செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவுகூருவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது. அனைவரும் ஓரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்கவேண்டும்.இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும். இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.01.வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப்படுகொலையாளிகளை பாரப்படுத்தவேண்டும்04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால்நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடையமுடியும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement