• Sep 19 2024

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் விஷேட நிகழ்வு

Sharmi / Jan 12th 2023, 2:38 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு இன்று மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு 23.12.2022 ஆம் திகதி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக பிறப்பு பதிவு செய்யும் விசேட சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது.

மேலும், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்களின் விரைவான நடவடிக்கையின் கீழ் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட முப்பத்தொரு நபர்களிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களை அடையாளங்கண்டு பிறப்பு பதிவினை மேற்கொள்ள வலியுறுத்துவதோடு, பிறப்பு பதிவினை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் 16.03.2023 விஷேடசேவை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாக பதில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யும் விஷேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு இன்று மண்டபத்தில் நடைபெற்றது.யாழ். மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு 23.12.2022 ஆம் திகதி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக பிறப்பு பதிவு செய்யும் விசேட சேவை ஒழுங்குபடுத்தப்பட்டது.மேலும், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்களின் விரைவான நடவடிக்கையின் கீழ் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட முப்பத்தொரு நபர்களிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.அத்துடன் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களை அடையாளங்கண்டு பிறப்பு பதிவினை மேற்கொள்ள வலியுறுத்துவதோடு, பிறப்பு பதிவினை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் 16.03.2023 விஷேடசேவை ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாக பதில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement