மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் (7) மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர். R.P.A ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில், சிவில் சமூகத் தொடர்பு அதிகாரி மேஜர் ஆ.ஏ. பெர்னாண்டோவின் ஏற்பாட்டிலும் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் 54 வது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று (07) காலை 9.00 மணியளவில் மன்னார் நகர பொது விளையாட்டரங்கில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.
மேலும் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட 15 பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட பாண்ட் இசை வாத்திய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றுக்கொண்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.
இன்று(7) மதியம் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பாண்ட் இசை வாத்திய போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கும் , கிரிக்கெட் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட கல்வியில் முதல் நிலை வகிக்கும் 60 மாணவர்களுக்கு புத்தகப்பை அடங்கலாக கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 60 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத்தின் வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் . J.P.C பீரிஸ் , விருந்தினர்களாக மன்னார் ஆயர். இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மாவட்டச் செயலாளர். க. கனகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பொலிஸ் அத்தியட்சகர் வை. சந்திரபால மற்றும் முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினரால் விசேட நிகழ்வு. மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் (7) மதியம் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர். R.P.A ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில், சிவில் சமூகத் தொடர்பு அதிகாரி மேஜர் ஆ.ஏ. பெர்னாண்டோவின் ஏற்பாட்டிலும் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.மன்னார் 54 வது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் இன்று (07) காலை 9.00 மணியளவில் மன்னார் நகர பொது விளையாட்டரங்கில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.மேலும் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட 15 பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட பாண்ட் இசை வாத்திய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்றுக்கொண்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.இன்று(7) மதியம் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது பாண்ட் இசை வாத்திய போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கும் , கிரிக்கெட் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட கல்வியில் முதல் நிலை வகிக்கும் 60 மாணவர்களுக்கு புத்தகப்பை அடங்கலாக கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 60 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத்தின் வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் . J.P.C பீரிஸ் , விருந்தினர்களாக மன்னார் ஆயர். இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மாவட்டச் செயலாளர். க. கனகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக பொலிஸ் அத்தியட்சகர் வை. சந்திரபால மற்றும் முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.