• Sep 20 2024

சீனி விற்பனையில் மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டம்! samugammedia

Tamil nila / Nov 4th 2023, 1:49 pm
image

Advertisement

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி  இன்று (04) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும்என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை கூறியுள்ளது.

இதேவேளை, சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும்  விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை நேற்று (03) வெளியிட்டது.

இதன்படி, பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை  சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகும்.

பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோவின்  அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும்.

ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின்  அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகும்.

பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான  25 சதம் வரியை இம்மாதம் முதலாம் திகதி முதல் 50 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சீனி விற்பனையில் மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டம் samugammedia அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி  இன்று (04) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும்என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை கூறியுள்ளது.இதேவேளை, சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும்  விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை நேற்று (03) வெளியிட்டது.இதன்படி, பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை  சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகும்.பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோவின்  அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும்.ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின்  அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகும்.பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.350 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான  25 சதம் வரியை இம்மாதம் முதலாம் திகதி முதல் 50 ரூபாவாக அதிகரிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement