• Nov 25 2024

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு..! - 42 பேர் அதிரடியாக கைது!

Chithra / Dec 17th 2023, 12:25 pm
image

 

 கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது பொலிஸார் மற்றும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் அலஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி 2024 ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 

அதற்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போதைப்பொருள் தொடர்பான தகவல்களை காவல்துறை தலைமையகத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, போதைப்பொருளுடன் தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு. - 42 பேர் அதிரடியாக கைது   கொலன்னாவ பகுதியில் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.அவர்களிடமிருந்து ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.இதன்போது பொலிஸார் மற்றும் படையினரின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் அலஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதன்படி 2024 ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் பூரண மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை போதைப்பொருள் தொடர்பான தகவல்களை காவல்துறை தலைமையகத்திற்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, போதைப்பொருளுடன் தொடர்புடைய தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement