• Nov 26 2024

கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில் ஆராய்வு - ஜெறோம்

Tharmini / Oct 26th 2024, 9:25 am
image

வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம், நேற்று (25) கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்   ஆராய்ந்துள்ளார்.

மன்னார், அடம்பன், கன்னாட்டியில் விவசாயிகளுடன் சந்திப்பில் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்க செய்வதன் ஊடாக வறட்சி காலத்தில் சிறுபோக நெற்செய்கை ஊக்கிவிக்கும் நோக்கில் குளத்தில் இருந்து விவசாயத்திற்கு எவ்வாறு நீர் வழங்கவேண்டும் என்பது தொடர்பில் வேட்பாளரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் முதன்மையான குளமாக கட்டுக்கரை குளம் காணப்படுகிறது. இந்த குளத்தை நம்பி பல ஆயிரம் விவசாயிகள், விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகிறார்கள். குளத்திற்கான நீர் வரத்தினை அதிகரிப்பதன் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என சுயேட்சைக்குழு வேட்பாளர் சம்சோன் ஜெறோம் எடுத்துரைத்துள்ளதுடன் விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.



கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில் ஆராய்வு - ஜெறோம் வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம், நேற்று (25) கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்   ஆராய்ந்துள்ளார்.மன்னார், அடம்பன், கன்னாட்டியில் விவசாயிகளுடன் சந்திப்பில் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்க செய்வதன் ஊடாக வறட்சி காலத்தில் சிறுபோக நெற்செய்கை ஊக்கிவிக்கும் நோக்கில் குளத்தில் இருந்து விவசாயத்திற்கு எவ்வாறு நீர் வழங்கவேண்டும் என்பது தொடர்பில் வேட்பாளரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மன்னாரில் முதன்மையான குளமாக கட்டுக்கரை குளம் காணப்படுகிறது. இந்த குளத்தை நம்பி பல ஆயிரம் விவசாயிகள், விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகிறார்கள். குளத்திற்கான நீர் வரத்தினை அதிகரிப்பதன் ஊடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என சுயேட்சைக்குழு வேட்பாளர் சம்சோன் ஜெறோம் எடுத்துரைத்துள்ளதுடன் விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement