• May 03 2024

அமைச்சர் டக்ளஸ் பேசாலைக்கு திடீர் விஜயம்...!

Sharmi / Apr 20th 2024, 9:31 am
image

Advertisement

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(20)  பேசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவுசெய்து  தரப்படும் எனவும்  மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம், தபாலகம்,  மீன் சந்தை,  ஆயுவேத வைத்திய நிலையம்  உள்ளிட்ட மக்களது அவசிய தேவைகள் அடங்கிய வளாகம் ஒன்றை அமைப்பதுதொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

இந்நிலையில்  மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர்  முதலில் பேசாலை நகரப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் நவீன சந்தை தொகுதி தபால் நிலையம், அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.

குறிப்பாக பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதிதை, தபால் நிலையம், ஆய்ர்வேத வைத்தியசாலை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




அமைச்சர் டக்ளஸ் பேசாலைக்கு திடீர் விஜயம். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(20)  பேசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் கலந்துகொண்டிருந்தார்.இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவுசெய்து  தரப்படும் எனவும்  மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம், தபாலகம்,  மீன் சந்தை,  ஆயுவேத வைத்திய நிலையம்  உள்ளிட்ட மக்களது அவசிய தேவைகள் அடங்கிய வளாகம் ஒன்றை அமைப்பதுதொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.இந்நிலையில்  மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர்  முதலில் பேசாலை நகரப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் நவீன சந்தை தொகுதி தபால் நிலையம், அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.குறிப்பாக பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதிதை, தபால் நிலையம், ஆய்ர்வேத வைத்தியசாலை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement