• Dec 14 2024

நாடாளுமன்றத்துக்குள் நுழையும் திருடன்; ஆசாத் சாலி விடுத்த எச்சரிக்கை..!

Sharmi / Nov 20th 2024, 8:53 pm
image

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியினரும் வரமாட்டார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

ரவி கருணாநாயக்க ஒரு கொடூரமான வேலை செய்துள்ளார். அந்த வேலையால், கட்சிகள் இப்போது கூட்டணி அமைக்க அஞ்சுகின்றன.  

இப்படியே போனால் இன்னும் இரண்டு தேர்தல்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியினரும் வரமாட்டார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் இன்னும் வைத்தியசாலையில் இருக்கிறார். நாளை ரவி கருணாநாயக்க பாராளுமன்றம் சென்றவுடன் மீண்டும் வீடு திரும்புவார்.

இப்போது ரணில் தான் அவ்வாறு செய்யச் சொன்னதாக ரவி கூறிவருகின்றார்.  தலைவர் ரணில் இப்போது இந்த விடயத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டி ரவியின் உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்ல வேண்டியவர் ஒரு திருடன் அல்ல.  ஒரு நல்ல இளம், படித்த, அறிவார்ந்த, தலைமைத்துவம் உடையவரே.  

நாளை ரவி கருணாநாயக்க  நாடாளுமன்றம் சென்றவுடனே மக்கள் அவரை திருடன் திருடன் என்பார்கள். 

நாடாளுமன்றத்துக்குள் திருடன் வந்திருக்கிறான் என்று அரசிடம் தகவல் கூறுகின்றோம்.  

முதலில் அவனைப் பிடிக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துக்குள் நுழையும் திருடன்; ஆசாத் சாலி விடுத்த எச்சரிக்கை. எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியினரும் வரமாட்டார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,ரவி கருணாநாயக்க ஒரு கொடூரமான வேலை செய்துள்ளார். அந்த வேலையால், கட்சிகள் இப்போது கூட்டணி அமைக்க அஞ்சுகின்றன.  இப்படியே போனால் இன்னும் இரண்டு தேர்தல்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியினரும் வரமாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் இன்னும் வைத்தியசாலையில் இருக்கிறார். நாளை ரவி கருணாநாயக்க பாராளுமன்றம் சென்றவுடன் மீண்டும் வீடு திரும்புவார்.இப்போது ரணில் தான் அவ்வாறு செய்யச் சொன்னதாக ரவி கூறிவருகின்றார்.  தலைவர் ரணில் இப்போது இந்த விடயத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை கூட்டி ரவியின் உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்ல வேண்டியவர் ஒரு திருடன் அல்ல.  ஒரு நல்ல இளம், படித்த, அறிவார்ந்த, தலைமைத்துவம் உடையவரே.  நாளை ரவி கருணாநாயக்க  நாடாளுமன்றம் சென்றவுடனே மக்கள் அவரை திருடன் திருடன் என்பார்கள். நாடாளுமன்றத்துக்குள் திருடன் வந்திருக்கிறான் என்று அரசிடம் தகவல் கூறுகின்றோம்.  முதலில் அவனைப் பிடிக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement