• Oct 02 2025

வெடிபொருட்களுடன் வெளியேவந்த புலிக்கொடி! முல்லைத்தீவில் பரபரப்பு

Chithra / Oct 1st 2025, 8:11 pm
image


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியை, அதன் உரிமையாளரால் துப்பரவு செய்துள்ளார். 

இதன்போது காணியில்  ஆர்.பி.ஜி ரக குண்டுகள், புலிக்கொடி போன்றவை  இருந்துள்ளதை உரிமையாளர் அவதானித்துள்ளார். 

இதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில், காணியின் உரிமையாளரால் இன்று காலை  முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வெடிபொருட்களுடன் வெளியேவந்த புலிக்கொடி முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியை, அதன் உரிமையாளரால் துப்பரவு செய்துள்ளார். இதன்போது காணியில்  ஆர்.பி.ஜி ரக குண்டுகள், புலிக்கொடி போன்றவை  இருந்துள்ளதை உரிமையாளர் அவதானித்துள்ளார். இதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில், காணியின் உரிமையாளரால் இன்று காலை  முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement