இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் 'நட்பின் சிறகுகள்' என்ற தொனிப்பொருளில் யாழ்பாணத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் துவிச்சக்கரவண்டி போட்டி ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி, காலி முகத்திடலில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையும்.
இதேவேளை, பெண்களுக்கான போட்டியானது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரை நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை முற்றவெளி மைதானத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை விமானப்படை நடத்தவுள்ளது.
விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் துவிச்சக்கர வண்டி போட்டி. இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் 'நட்பின் சிறகுகள்' என்ற தொனிப்பொருளில் யாழ்பாணத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் துவிச்சக்கரவண்டி போட்டி ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி, காலி முகத்திடலில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையும்.இதேவேளை, பெண்களுக்கான போட்டியானது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரை நடத்தப்படவுள்ளது.இதனைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை முற்றவெளி மைதானத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை விமானப்படை நடத்தவுள்ளது.