• May 17 2024

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Chithra / Dec 10th 2022, 2:57 pm
image

Advertisement

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை  போலித்  திறப்புகளைக் கொண்டு  திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யயப்பட்டுள்ளார்.

பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள்  நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று குறித்த மோட்டார் சைக்கிள்களின்  இருக்கையின் கீழ்ப் பகுதியை போலி திறப்புக்களைப் பயன்படுத்தி திறந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத்  திருடிய  நிலையில் இவர்  கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தெரிவித்தார்.  


அநுராதபுரம், வன்னியங்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பாடசாலைகள், இயற்கை பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்தே இந்த திருட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகன் பெண்களின் மோட்டார் சைக்கிள்களின் இருக்கையின் கீழ்ப் பகுதியை  போலித்  திறப்புகளைக் கொண்டு  திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யயப்பட்டுள்ளார்.பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள்  நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று குறித்த மோட்டார் சைக்கிள்களின்  இருக்கையின் கீழ்ப் பகுதியை போலி திறப்புக்களைப் பயன்படுத்தி திறந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா பணம் மற்றும் கைத்தொலைபேசிகளைத்  திருடிய  நிலையில் இவர்  கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தெரிவித்தார்.  அநுராதபுரம், வன்னியங்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பாடசாலைகள், இயற்கை பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்தே இந்த திருட்டுச் சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement