வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காட்டு யானையொன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யானை கஜு தோட்டத்திற்கு செல்லும் வீதியினால் சென்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த யானையின் தலையில் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ள நிலையில் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யானையைக் கொள்வதற்கு T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திருக்கலாமென அதிகாரிகள் மேலும் சந்தேகிக்கின்றனர்.
குறித்த யானை சுமார் 10 கொண்டு காணப்படுவதுடன் 35 வயது என மதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்படுகிறது.
குறித்த யானைக்கு நிக்காவெரெட்டிய மிருக வைத்தியர் இசுரு கொட்டகேவினால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்தச் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் வண்ணாத்திவில்லு பொலிஸார் இனைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்ணாத்திவில்லு கரடிப்புவவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காட்டு யானை உயிரிழப்பு வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் காட்டு யானையொன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த யானை கஜு தோட்டத்திற்கு செல்லும் வீதியினால் சென்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்போது குறித்த யானையின் தலையில் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ள நிலையில் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த யானையைக் கொள்வதற்கு T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திருக்கலாமென அதிகாரிகள் மேலும் சந்தேகிக்கின்றனர்.குறித்த யானை சுமார் 10 கொண்டு காணப்படுவதுடன் 35 வயது என மதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்படுகிறது.குறித்த யானைக்கு நிக்காவெரெட்டிய மிருக வைத்தியர் இசுரு கொட்டகேவினால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்தச் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் வண்ணாத்திவில்லு பொலிஸார் இனைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.