• Nov 27 2024

நடத்துநரின் உதவியுடன் பேருந்தில் குழந்தையை பிரசவித்த பெண்..!

Sharmi / Aug 20th 2024, 8:29 pm
image

பேருந்து ஒன்றில் தாய் ஒருவர் தனது குழந்தையை பிரசவித்த எதிர்பாராத சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

சந்தியா என்ற குறித்த பெண் நேற்றையதினம்(19) ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடுவதற்காகச் பேருந்து ஒன்றில் சென்றிருந்த போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டார்.

அதன்படி, பஸ் நடத்துநரும், செவிலியர் ஒருவரும் உடனடியாக பெண்ணின் குழந்தையை பிரசவிக்க உதவினர்.

எதிர்பாராத ஆனால் சுகப்பிரசவம் நடந்ததையடுத்து, தாயும் குழந்தையும் பத்திரமாக அதே பேருந்தில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வி.சி.சஜ்ஜனர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 

கர்ப்பிணிப் பயணியைப் பராமரித்ததற்காகவும், அவசர காலத்தில் ஆதரவாகவும், தன்னலமற்ற செயல்பாட்டிற்காகவும் குறித்த  பேருந்தின் நடத்துநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்  என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்  தாயும் சேயும் நலமாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்துநரின் உதவியுடன் பேருந்தில் குழந்தையை பிரசவித்த பெண். பேருந்து ஒன்றில் தாய் ஒருவர் தனது குழந்தையை பிரசவித்த எதிர்பாராத சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.சந்தியா என்ற குறித்த பெண் நேற்றையதினம்(19) ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடுவதற்காகச் பேருந்து ஒன்றில் சென்றிருந்த போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டார்.அதன்படி, பஸ் நடத்துநரும், செவிலியர் ஒருவரும் உடனடியாக பெண்ணின் குழந்தையை பிரசவிக்க உதவினர்.எதிர்பாராத ஆனால் சுகப்பிரசவம் நடந்ததையடுத்து, தாயும் குழந்தையும் பத்திரமாக அதே பேருந்தில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வி.சி.சஜ்ஜனர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கர்ப்பிணிப் பயணியைப் பராமரித்ததற்காகவும், அவசர காலத்தில் ஆதரவாகவும், தன்னலமற்ற செயல்பாட்டிற்காகவும் குறித்த  பேருந்தின் நடத்துநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்  என பதிவிட்டுள்ளார்.இந்நிலையில்  தாயும் சேயும் நலமாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement