• Jul 18 2025

Chithra / Jul 17th 2025, 11:08 am
image


நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார். 

நுவரெலியா - கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 4ஆம் தரத்தில் இவர் கல்வி கற்று வருகிறார். 

குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறி சாதனை  படைத்துள்ளார்.

இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த மாணவி கனிஷ்காவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலப்பனை வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.

சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலையக மாணவி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார். நுவரெலியா - கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 4ஆம் தரத்தில் இவர் கல்வி கற்று வருகிறார். குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறி சாதனை  படைத்துள்ளார்.இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.சோழன் உலக சாதனை படைத்த மாணவி கனிஷ்காவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலப்பனை வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement