• May 13 2025

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Chithra / May 12th 2025, 3:19 pm
image

 

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை நிலையமான வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு(12) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் எனவும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை நிலையமான வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.நேற்று இரவு(12) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் எனவும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement