• May 19 2024

இடைநடுவில் கைவிடப்பட்ட வீதி புனரமைப்பு...! குளமாக மாறிய கல்முனை வீதி..!samugammedia

Sharmi / Aug 15th 2023, 8:37 pm
image

Advertisement

பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி  செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த வீதி  செப்பனிடுவது  இடைநடுவில் கைவிட்டதனால் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளதுடன் சிறுவர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர்  றிஸ்வி வீதியே  அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பமான நிலையில் தற்போது   இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (11)  அப்பகுதி  அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக குறித்த வீதியின் புனர்நிர்மாண  வேலை இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வீதி தோண்டப்பட்ட நிலையில் மக்கள் பயன்படுத்தும் முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவம் அப்பகுதி மக்கள் மகஜர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும்,கடந்த காலங்களில் கூட குறித்த வீதியின் நிர்மாணம்   தனி நபர் ஒருவரின் ஆதிக்கத்தினால் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த  வீதியை துரித கதியில் நடவடிக்கை எடுத்து  புனரமைப்பினை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள்  விடுக்கின்றனர்.



இடைநடுவில் கைவிடப்பட்ட வீதி புனரமைப்பு. குளமாக மாறிய கல்முனை வீதி.samugammedia பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி  செப்பனிடுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனால் குறித்த வீதி  செப்பனிடுவது  இடைநடுவில் கைவிட்டதனால் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளதுடன் சிறுவர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர்  றிஸ்வி வீதியே  அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பமான நிலையில் தற்போது   இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (11)  அப்பகுதி  அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக குறித்த வீதியின் புனர்நிர்மாண  வேலை இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவ் வீதி தோண்டப்பட்ட நிலையில் மக்கள் பயன்படுத்தும் முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவம் அப்பகுதி மக்கள் மகஜர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.மேலும்,கடந்த காலங்களில் கூட குறித்த வீதியின் நிர்மாணம்   தனி நபர் ஒருவரின் ஆதிக்கத்தினால் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.எனவே, குறித்த  வீதியை துரித கதியில் நடவடிக்கை எடுத்து  புனரமைப்பினை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள்  விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement