• Dec 05 2024

மாகாணசபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா - சபா குகதாஸ்!

Tamil nila / Dec 3rd 2024, 9:05 pm
image

மாகாணசபை முறை ஒழிப்பு என்பது சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்லின மத கலாசாரம் கொண்ட நாடுகளில் அரசியல் அமைதியை உறுதி செய்த அரசியல் அமைப்பு சமஸ்டிப் பண்புகளை கொண்டதாகவே இருக்கின்றது. அதனால் அன் நாடுகள் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியதுடன் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய புதிய பரிணாமங்களையும் பெற்றுள்ளன.

பல்லினங்களின் உரிமைகளையும் அவர்களது அடிப்படை அபிலாசைகளையும் மதிக்கின்ற சட்டங்களையும் இனங்களுக்கு இடையேயான சுயமரியாதை மற்றும் சகோதரத்துவம் பேணப்படுவதற்கும் உலகில் வெற்றி கண்ட அரசியல் அமைப்பு சமஸ்டி ஆகும்.

இத்தகைய சிறந்த பண்புகளை கொண்ட கட்டமைப்பாக மாற்றக் கூடிய திருத்தமே தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை திருத்த சட்டம் இதனை கடந்த கால ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி அதனை அரசியல் இனவாதமாக பயன்படுத்தியதன் அறுவடையே நாட்டின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவு.

இவற்றை எல்லாம் உற்று நோக்கி கடந்தகால வரலாற்றை ஒரு சிறந்த பாடமாக புதிய ஆட்சியாளர்கள் சிந்தித்தால் இன்று மாகாணசபை முறையை ஒழிக்க வேண்டும் என அறிக்கை விட்டிருக்க மாட்டார்கள் அநுர அரசின் இத்தகைய அறிக்கைகள் தென்னிலங்கையின் தோல்வி கண்ட கடும் போக்காளர்களை திருப்திப்படுத்தவும் பிராந்திய வல்லரசை எதிர்க்கும் பூகோள வல்லரசை சந்தோஷப்படுத்தவும் கடந்த கால ஆட்சியாளர்களை விட தங்களின் மோசமான இனவாத போக்கையும் சூசகமாக காட்டியுள்ளது.

பல இனங்கள் வாழும் ஐரோப்பிய  மற்றும் பிரித்தானிய,அமெரிக்க, இந்திய நாடுகளின் அரசியல் அமைப்பையும் உட் கட்டமைப்பையும் நிதானமாக ஆராய்ந்தால் இலங்கைத் தீவை மிக இலகுவாக முன்னோக்கி கொண்டு செல்லலாம்.

மாகாணசபை முறையை ஒழித்து சமத்துவ அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பது சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் அரசியல் ஆட்சியை அடி ஒற்றிய பயணமா?அல்லது தற்போது இருக்கின்ற ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்திய சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா? அல்லது சிறிய தேசிய இனங்களின் அபிலாசைகளை சிதைத்து அவர்களின் குரலை சட்டரீதியாக அடக்கும் நோக்கமா? இவ்வாறான எண்ணங்கள் ஆட்சியாளரிடம் இருக்குமாயின் கடந்தகால ஆட்சியாளரின் பதவி ஆயுட்காலத்தை விட குறுகியதாக அநுர அரசின் பயணம் அமைந்து விடும்.

மத்திய அரசிற்கும் மாகாணசபைக்குமான அதிகாரங்களை அர்த்தமுள்ளதாக பகிர்ந்து பாதுகாப்பான சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமே நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்க முடியும் அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் இல்லா விட்டால் மீண்டும் கடந் கால ஆட்சியை போன்று நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கும்.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளை தந்திரோபாயமாக கையாள வேண்டும் பிராந்திய, பூகோள நாடுகளின் முரண்பட்ட நிலை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூர்மையடையுமாயின் கடந்த காலங்களை போன்ற பலவீனமான நிலையே தொடரும் ஆரோக்கியமான பயணத்தை கேள்விக்குள்ளாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபை முறை ஒழிப்பு சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா - சபா குகதாஸ் மாகாணசபை முறை ஒழிப்பு என்பது சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்றைய தினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பல்லின மத கலாசாரம் கொண்ட நாடுகளில் அரசியல் அமைதியை உறுதி செய்த அரசியல் அமைப்பு சமஸ்டிப் பண்புகளை கொண்டதாகவே இருக்கின்றது. அதனால் அன் நாடுகள் உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியதுடன் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய புதிய பரிணாமங்களையும் பெற்றுள்ளன.பல்லினங்களின் உரிமைகளையும் அவர்களது அடிப்படை அபிலாசைகளையும் மதிக்கின்ற சட்டங்களையும் இனங்களுக்கு இடையேயான சுயமரியாதை மற்றும் சகோதரத்துவம் பேணப்படுவதற்கும் உலகில் வெற்றி கண்ட அரசியல் அமைப்பு சமஸ்டி ஆகும்.இத்தகைய சிறந்த பண்புகளை கொண்ட கட்டமைப்பாக மாற்றக் கூடிய திருத்தமே தற்போது நடைமுறையில் உள்ள மாகாணசபை திருத்த சட்டம் இதனை கடந்த கால ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி அதனை அரசியல் இனவாதமாக பயன்படுத்தியதன் அறுவடையே நாட்டின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவு.இவற்றை எல்லாம் உற்று நோக்கி கடந்தகால வரலாற்றை ஒரு சிறந்த பாடமாக புதிய ஆட்சியாளர்கள் சிந்தித்தால் இன்று மாகாணசபை முறையை ஒழிக்க வேண்டும் என அறிக்கை விட்டிருக்க மாட்டார்கள் அநுர அரசின் இத்தகைய அறிக்கைகள் தென்னிலங்கையின் தோல்வி கண்ட கடும் போக்காளர்களை திருப்திப்படுத்தவும் பிராந்திய வல்லரசை எதிர்க்கும் பூகோள வல்லரசை சந்தோஷப்படுத்தவும் கடந்த கால ஆட்சியாளர்களை விட தங்களின் மோசமான இனவாத போக்கையும் சூசகமாக காட்டியுள்ளது.பல இனங்கள் வாழும் ஐரோப்பிய  மற்றும் பிரித்தானிய,அமெரிக்க, இந்திய நாடுகளின் அரசியல் அமைப்பையும் உட் கட்டமைப்பையும் நிதானமாக ஆராய்ந்தால் இலங்கைத் தீவை மிக இலகுவாக முன்னோக்கி கொண்டு செல்லலாம்.மாகாணசபை முறையை ஒழித்து சமத்துவ அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பது சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் அரசியல் ஆட்சியை அடி ஒற்றிய பயணமாஅல்லது தற்போது இருக்கின்ற ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்திய சர்வாதிகார ஒற்றையாட்சியை நோக்கிய பயணமா அல்லது சிறிய தேசிய இனங்களின் அபிலாசைகளை சிதைத்து அவர்களின் குரலை சட்டரீதியாக அடக்கும் நோக்கமா இவ்வாறான எண்ணங்கள் ஆட்சியாளரிடம் இருக்குமாயின் கடந்தகால ஆட்சியாளரின் பதவி ஆயுட்காலத்தை விட குறுகியதாக அநுர அரசின் பயணம் அமைந்து விடும்.மத்திய அரசிற்கும் மாகாணசபைக்குமான அதிகாரங்களை அர்த்தமுள்ளதாக பகிர்ந்து பாதுகாப்பான சமஷ்டி அரசியல் அமைப்பின் மூலமே நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்க முடியும் அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட முடியும் இல்லா விட்டால் மீண்டும் கடந் கால ஆட்சியை போன்று நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கும்.சர்வதேச நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளை தந்திரோபாயமாக கையாள வேண்டும் பிராந்திய, பூகோள நாடுகளின் முரண்பட்ட நிலை தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூர்மையடையுமாயின் கடந்த காலங்களை போன்ற பலவீனமான நிலையே தொடரும் ஆரோக்கியமான பயணத்தை கேள்விக்குள்ளாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement