• Nov 23 2024

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு...! பணிக்கு திரும்புங்கள்...! பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைப்பு...!

Sharmi / May 16th 2024, 9:24 am
image

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில்,

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை, கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகள் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு. பணிக்கு திரும்புங்கள். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைப்பு. கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில்,கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.இந்நிலையில் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் மாணவர்களைப் பற்றி சிந்தித்து பணிக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.அதேவேளை, கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தற்போது பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகள் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகின்றன.அதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கற்கும் சுமார் 3500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.மேலும், கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் தாமதமடைந்துள்ளதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement