• Jul 14 2025

கண்டி வைத்தியசாலையில் அசம்பாவிதம்; அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து முதியவர் பலி!

Chithra / Jul 13th 2025, 8:42 am
image

கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்தார். 

நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்து பகுதியைச் சேர்ந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, 

சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கண்டி வைத்தியசாலையில் அசம்பாவிதம்; அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து முதியவர் பலி கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்தார். நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்து பகுதியைச் சேர்ந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement