• Nov 13 2025

மருதங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் விபத்து

Chithra / Nov 11th 2025, 11:00 am
image

  

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் நேற்றைய தினம் பிற்பகல்  துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நான்கு வயதுடைய மகனுக்கு சிகிச்சை பெறுவதற்காக தாய் ஒருவர் வந்துகொண்டிருந்துள்ளார்.

வைத்தியசாலை வாயில் பகுதியில் இருந்து உட்பகுதிக்கு செல்ல முயன்ற நோயாளர்  காவு வண்டி பின் பக்கம் நோக்கி வருவதை அவதானித்த பெண் தனது துவிச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்ற போது பின் பக்கமாக வந்ததுகொண்டிருந்த நோயாளி காவு வண்டி துவிச்சக்கர வண்டியை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தின் போது காயமடைந்த நான்கு வயது சிறுவனும் தாயாரும் சிகிச்சையின் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் விபத்து   யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் நேற்றைய தினம் பிற்பகல்  துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நான்கு வயதுடைய மகனுக்கு சிகிச்சை பெறுவதற்காக தாய் ஒருவர் வந்துகொண்டிருந்துள்ளார்.வைத்தியசாலை வாயில் பகுதியில் இருந்து உட்பகுதிக்கு செல்ல முயன்ற நோயாளர்  காவு வண்டி பின் பக்கம் நோக்கி வருவதை அவதானித்த பெண் தனது துவிச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்ற போது பின் பக்கமாக வந்ததுகொண்டிருந்த நோயாளி காவு வண்டி துவிச்சக்கர வண்டியை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது காயமடைந்த நான்கு வயது சிறுவனும் தாயாரும் சிகிச்சையின் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement