• Nov 13 2025

அம்பாறை இரட்டைக்கொலை சம்பவம்: அறுவருக்கு மரண தண்டனை!

Chithra / Nov 11th 2025, 10:51 am
image

 

அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அம்பாறை இரட்டைக்கொலை சம்பவம்: அறுவருக்கு மரண தண்டனை  அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 6 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement