• Apr 03 2025

மாவடிப்பள்ளி பாலத்தடியில் விபத்து: 1 கிலோமீற்றர் தூரம் வரை வாகன நெரிசல்..!

Sharmi / Apr 2nd 2025, 3:44 pm
image

மாவடிப்பள்ளி பாலத்தடியில்  நேற்றையதினம்(01) இரவு இடம்பெற்ற சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் பகுதியில் நேருக்கு நேர் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நெருக்குண்டு விபத்துக்குள்ளாகின.

இதனால் குறித்த பாலத்தில் இரு வாகனங்களும் சிக்கிக்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து கல்முனை அக்கரைப்பற்று நோக்கி சென்ற வாகனங்களும் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக செல்ல முற்பட்ட சகல வாகனங்களும் இச்சம்பவத்தினால் போக்குவரத்து செய்ய முடியாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள், குறித்த விடயங்களை சீராக்கியதன் மூலம் தொடர்ந்தும் குறித்த பாலத்தின் ஊடாக மற்றைய வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.

சுமார் பல ஆண்டு காலமாக மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலமானது காணப்படுவதுடன் தற்போது உடைந்து சிதைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மாவடிப்பள்ளி பாலத்தடியில் விபத்து: 1 கிலோமீற்றர் தூரம் வரை வாகன நெரிசல். மாவடிப்பள்ளி பாலத்தடியில்  நேற்றையதினம்(01) இரவு இடம்பெற்ற சிறு விபத்து காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் பகுதியில் நேருக்கு நேர் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நெருக்குண்டு விபத்துக்குள்ளாகின.இதனால் குறித்த பாலத்தில் இரு வாகனங்களும் சிக்கிக்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து கல்முனை அக்கரைப்பற்று நோக்கி சென்ற வாகனங்களும் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக செல்ல முற்பட்ட சகல வாகனங்களும் இச்சம்பவத்தினால் போக்குவரத்து செய்ய முடியாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள், குறித்த விடயங்களை சீராக்கியதன் மூலம் தொடர்ந்தும் குறித்த பாலத்தின் ஊடாக மற்றைய வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.சுமார் பல ஆண்டு காலமாக மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலமானது காணப்படுவதுடன் தற்போது உடைந்து சிதைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement