• Dec 03 2024

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம்..!!

Tamil nila / Feb 8th 2024, 8:15 pm
image

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் உடலில் விஷம் பரவிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் வழங்கிய பால் பக்கெட்டை பருகிய பின்னர் அவர்கள் சிறைக்கூடத்திற்குள் வீழ்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் உடலில் விஷம் பரவிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.குறித்த சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் வழங்கிய பால் பக்கெட்டை பருகிய பின்னர் அவர்கள் சிறைக்கூடத்திற்குள் வீழ்ந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement