• May 04 2024

பாடசாலைகளை சுற்றும் காவாலிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Sharmi / Jan 20th 2023, 5:36 pm
image

Advertisement

பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அது தொடர்பில் பெற்றோர்களில் ஒருவர் தெரிவிக்கையில், 

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் , போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் , பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் அநாவசியமாக நடமாடுபவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பாடசாலைகள் ,தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் அவற்றை சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் , துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிலர் தேவையற்று நடமாடுகின்றனர். 

அவ்வாறானவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவர்களின் நடமாட்டங்கள் , ஆடைகள் என்பவை சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. 

அதேவேளை மாணவிகளுடன் சேட்டை விடுவது , போக்குவரத்து விதிமுறைகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்துதல் போன்ற விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். 

எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரினார். 

பாடசாலைகளை சுற்றும் காவாலிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது தொடர்பில் பெற்றோர்களில் ஒருவர் தெரிவிக்கையில், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் , போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் , பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் அநாவசியமாக நடமாடுபவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாடசாலைகள் ,தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் அவற்றை சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் , துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிலர் தேவையற்று நடமாடுகின்றனர். அவ்வாறானவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவர்களின் நடமாட்டங்கள் , ஆடைகள் என்பவை சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. அதேவேளை மாணவிகளுடன் சேட்டை விடுவது , போக்குவரத்து விதிமுறைகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்துதல் போன்ற விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரினார். 

Advertisement

Advertisement

Advertisement