• Jan 16 2025

வடக்கு மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கான கட்டணத்தை நீக்க நடவடிக்கை – ரஜீவன் எம்.பி. வலியுறுத்து

Chithra / Jan 15th 2025, 1:07 pm
image


வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

 வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது அனைவருக்கும் இலவச கல்வியை உறுதிப்படுத்தும் வழி என அவர் மேலும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த தேவையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், 

மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க இது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சியின் மூலம் அனைத்து மாணவர்களும் பொருளாதார சிரமங்களை எண்ணாமல் தங்களின் கல்வி பயணத்தை தொடரும் வகையில் உரிமை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

வடக்கு மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கான கட்டணத்தை நீக்க நடவடிக்கை – ரஜீவன் எம்.பி. வலியுறுத்து வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது அனைவருக்கும் இலவச கல்வியை உறுதிப்படுத்தும் வழி என அவர் மேலும் தெரிவித்தார்.2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த தேவையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க இது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த முயற்சியின் மூலம் அனைத்து மாணவர்களும் பொருளாதார சிரமங்களை எண்ணாமல் தங்களின் கல்வி பயணத்தை தொடரும் வகையில் உரிமை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement