• Mar 28 2025

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க நடவடிக்கை - விஜித ஹேரத் உறுதி..!

Sharmi / Dec 23rd 2024, 10:03 am
image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாங்கள் இன மற்றும் மதவாதத்துக்கு எதிராக செயற்படுகின்றோம். நாம் அவ்வாறு செயற்படுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கும் உள்ளது.

அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

அந்தவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான யோசனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ள அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மக்கள் இப்போது கோருகின்றமை தெளிவான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.





நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க நடவடிக்கை - விஜித ஹேரத் உறுதி. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாங்கள் இன மற்றும் மதவாதத்துக்கு எதிராக செயற்படுகின்றோம். நாம் அவ்வாறு செயற்படுவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கும் உள்ளது.அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.அந்தவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான யோசனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.அதேவேளை, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ள அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர வேண்டும், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மக்கள் இப்போது கோருகின்றமை தெளிவான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement